கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மீண்டும் குறைப்பு?


கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மீண்டும் குறைப்பு?
x
தினத்தந்தி 4 Oct 2018 11:58 PM GMT (Updated: 2018-10-05T05:28:14+05:30)

இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் மீதான விற்பனை வரியில் ரூ.2-ஐ குறைத்து முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மீண்டும் குறைக்கப்படுமா என்று முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளது. இறுதியிலாவது இந்த விலை குறைப்பை மத்திய அரசு செய்திருக்கிறது. இதனால் மக்கள் மீதான சுைம குறையும்.

இதை நான் வரவேற்கிறேன். கர்நாடக அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. அதனால் மீண்டும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க மாட்டோம்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story