சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Oct 2018 3:15 AM IST (Updated: 5 Oct 2018 6:43 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள எட்டிசேரி கிராமத்தில் உள்ள சுடுகாடு பாதை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், பால்வண்ணநாதபுரத்தில் உள்ள அருந்ததியர் தெருவுக்கு செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பை சரி செய்ய வேண்டும், மூவிருந்தாளியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை மீட்டு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் கதிரவன் தலைமையில், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பரபரப்பு 

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பொதுமக்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் அமைப்பு செயலாளர் ஆதீவீரன், பொருளாளர் கருவீரா, இளைஞரணி சண்முகம், கொள்கை பரப்பு செயலாளர் திருக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story