தூத்துக்குடியில் கியாஸ் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் வைத்து கியாஸ் டேங்கர் லாரி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள தனியார் கியாஸ் குடோனில் வைத்து கியாஸ் டேங்கர் லாரி டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர்மன்னன் தலைமை தாங்கினார். ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கியாஸ் டேங்கர் லாரி டிரைவர்கள் விபத்தை தடுப்பது எப்படி?, விபத்து நடந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தனியார் நிறுவன மேலாளர்கள் பிரபாகரன், பாபு, பாதுகாப்பு அதிகாரி பழனிகுமார் மற்றும் டேங்கர் லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story