உலகிலேயே சக்திவாய்ந்த ‘ரோபோ’!


உலகிலேயே சக்திவாய்ந்த ‘ரோபோ’!
x
தினத்தந்தி 6 Oct 2018 4:50 PM IST (Updated: 6 Oct 2018 4:50 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே சிறிய, சக்திவாய்ந்த ரோபோவை உருவாக்கியிருப்பதாக ஹாங்காங் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புழு போன்ற தோற்றம் கொண்ட இதற்கு, மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மில்லிமீட்டர் நீளமே கொண்ட இந்த ரோபோ, மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு தேவைப்படும் இடத்தை ஆராய்ச்சி செய்யவும், முடிந்தால் அறுவைசிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தாங்கக்கூடியது என்பதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனைக்கும் சொந்தமானதாக இருக்கிறது.

ஒரு மனிதர் மீது பஸ் அளவு எடையை ஏற்றுவதற்குச் சமமான அழுத்தத்தை இந்த ரோபோ தாங்கும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

கம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களைக் கொண்டதாக இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை வடிவமைப்பதற்காக நூறுக்கும் மேற்பட்ட விலங்குகளை ஆய்வு செய்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் இந்த மில்லிரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

Next Story