தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
தூத்துக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
மருத்துவ உபகரணங்கள்தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, குலசேகரபட்டினம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மொத்தம் ரூ.9 லட்சத்து 16 ஆயிரத்து 320 மதிப்பிலான தானியங்கி கண் பரிசோதனை கருவி, தானியங்கி ரத்த அழுத்த கருவி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்நிகழ்ச்சியில் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கீதாராணி (தூத்துக்குடி), போஸ்கோராஜா (கோவில்பட்டி), உதவி திட்ட அலுவலர் கன்னியம்மாள், மாவட்ட பூச்சியியல் அலுவலர் ஆனந்த், மாவட்ட பிரிவு மருத்துவ அலுவலர் வியூமூனிஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன்,, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.