புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி 3-வது சனிக் கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆவுடையார்கோவில்,
ஆவுடையார்கோவில் அருகே பரமந்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி ஆதிகேசவப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசத்தில் ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பரமந்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல பொன்னமராவதியில் உள்ள அழகபெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகபெருமாள் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். மேலும் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கீரமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள மாயம்பெருமாள் கோவிலிலும் புரட்டாசி 3-வது சனிக் கிழமையையொட்டி மாயம்பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story