சர்வதேச அளவில் எந்த நிர்ப்பந்தத்துக்கும் பா.ஜனதா அரசு அடிபணியாது மன்னார்குடியில் எச். ராஜா பேட்டி


சர்வதேச அளவில் எந்த நிர்ப்பந்தத்துக்கும் பா.ஜனதா அரசு அடிபணியாது மன்னார்குடியில் எச். ராஜா பேட்டி
x
தினத்தந்தி 7 Oct 2018 4:45 AM IST (Updated: 7 Oct 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச அளவில் எந்த நிர்ப்பந்தத்துக்கும் பா.ஜனதா அரசு அடிபணியாது என மன்னார்குடியில் எச்.ராஜா கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 நாட்கள் சுற்றுபயணத்தின் ஒரு பகுதியாகப் மன்னார்குடிக்கு வந்துள்ளேன். வீடு தோறும் கழிவறை கட்டும் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், முத்ரா கடன் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடைந்திருக்கின்றன.

தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ரூ.2.50 குறைத்துள்ளது. பா.ஜனதா ஆளும் மாநில அரசுகளும் இதே போன்று குறைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரானுடன் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எந்த நிர்ப்பந்தம் வந்தாலும் அதற்கு மத்திய பா.ஜனதா அரசு அடிபணியாது.

தமிழகத்தில் உள்ள 38,640 கோவில்களையும் வழிப்படும் தலமாக கொண்டு வர வேண்டும். தி.மு.க மற்றும் சில அமைப்புகள் மக்களை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.

கோவில் சொத்துகளை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகை விட முடியாது. இந்து விரோதிகளை சமூகத்திற்கு எதிரான சக்திகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டியின் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், தஞ்சை பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் இளங்கோ, திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா, செயலாளர் செல்வம் ஆகியோர் உடனி இருந்தனர்.

Next Story