கடல் சீற்றத்தால் படகு போக்குவரத்து நிறுத்தம் விவேகானந்தர் மண்டபத்தில் தவித்த 500 பேர் மீட்பு
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் விவேகானந்தர் மண்டபத்துக்கு திடீரென படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தில் தவித்த சுமார் 500 பேர் மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி,
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியம் திடீரென வானில் கார் மேகம் சூழ்ந்தது. தொடர்ந்து 1 மணி முதல் 3 மணி வரை கன மழை பெய்தது. இதனால், கடற்கரை சாலை மற்றும் வீதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கன்னியாகுமரி கடலில் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்று காலை முதல் படகு போக்குவரத்து நடந்து வந்தது. பொதுவாக படகு போக்குவரத்து மாலை 4 மணி வரை நடைபெறும். இந்தநிலையில் நேற்று மதியம் கனமழையுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி விரைந்து வந்த வண்ணம் இருந்தன.
இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு மதியம் 2 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலை 4 மணி வரை சுற்றுலா பயணிகள் யாரையும் விவேகானந்தர் மண்டபத்துக்கு அழைத்து செல்லவில்லை.
இதற்கிடையே ஏற்கனவே விவேகானந்தர் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த சுமார் 500 சுற்றுலா பயணிகள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். மாலை 3.30 மணியளவில் கடல்சீற்றம் சற்று தணிந்தது. அதன்பிறகு விவேகானந்தர் மண்டபத்தில் தவித்த பயணிகள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
கன்னியாகுமரி சுனாமிகாலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று பெய்த கனமழையால், மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து வெளியேற முடியாமல் சுமார் 20 வீடுகளை சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்றனர்.
அப்போது, அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அத்துடன் தங்கள் பகுதிக்கு போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
குளச்சல் பகுதியில் நேற்று லேசான மழை பெய்தது. ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர். அவர்கள் தங்களது விசைப்படகுகளை குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் குளச்சல் பகுதியில் முகாமிட்டுள்ளனர். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பிரேமா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ், குளச்சல் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குளச்சல் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர்.

Related Tags :
Next Story