புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி நகரில் உள்ள கோட்டை பரவாசுதேவசாமி கோவிலில் புரட்டாசி 3- வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோன்று தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி பெருமாள் கோவிலில் சாமிக்கு அன்ன சேவை அலங்காரம் செய்யப்பட்டது. பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை கொண்டு திருப்பதி வெங்கடாஜலபதி உருவம் வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட உணவு வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அளேதர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செட்டிக்கரை ஸ்ரீபெருமாள்சாமி கோவிலில் சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று தர்மபுரியை அடுத்த மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சாமிக்கு வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதகப்பாடியில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உற்சவருக்கு சிறப்பு ஆராதனையும், மகாதீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாலக்கோடு அருகே உள்ள பேடரஅள்ளி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமணசாமி கோவில், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சி பத்மசாலியர் மடம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவெங்கடரமண சாமி கோவில், அளேபுரம் லட்சுமிநரசிம்மசாமி கோவில், ஆலம்பாடி ஸ்ரீ ரெங்கநாதர் கோவில்களில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போடுவராய சாமி பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள்சாமி கோவில், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணா பிருந்தாவனம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story