நடத்தையில் சந்தேகம்: உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட இளம்பெண் சாவு - கணவர் மீது கொலை வழக்குப்பதிவு
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் உருட்டு கட்டையால் தாக்கியதில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் உருட்டு கட்டையால் தாக்கியதில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கைதான கணவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகன் ராமசாமி (வயது 29). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மையகரத்தை சேர்ந்த செந்தில்குமார் மகள் கவுசல்யா(23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதற்கிடையே ராமசாமியின் நண்பர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு, கவுசல்யாவின் நடத்தை குறித்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கவுசல்யா மீது சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 29-ந் தேதி ராமசாமி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் கவுசல்யாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் கவுசல்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுகுறித்து கவுசல்யாவின் தந்தை செந்தில்குமாார்(45) ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கவுசல்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கவுசல்யா இறந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து ராமசாமியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story