மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 5:42 AM IST (Updated: 7 Oct 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், தையல் கூலி வழங்கக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் தையல் கூலியை வழங்கக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் புதிய பஸ்நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஜய குலசேகரன், புதுவை ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் காளிதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சி.பி. எஸ்.இ. பாடத்திட்டத்தை வழங்கும் தொடக்க பள்ளிகளில் பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் தையல் கூலி வழங்கவேண்டும், தொடக்கப்பள்ளி ஆசிரியர், மழலையர் பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்கள் ஆகியவற்றின் பணி இடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story