பாலியல் கல்வி பயிற்சி முகாம்
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாக மத்திய குற்றவியல் ஆவண காப்பக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மாணவர்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக பல பள்ளிகளில் பாலியல் கல்வி தொடங்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள் தாங்களாகவே முன் வந்து மாணவிகளுக்கு பாலியல் சார்ந்த தகவல்களை போதிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
மாணவிகளிடம் பாலியல் பற்றிய விஷயங்களை எவ்வாறு பக்குவமாக எடுத்துக்கூறுவது என்பது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்க பல தொண்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் ஒரே நேரத்தில் 1336 ஆசிரியர்களுக்கு பாலியல் பற்றிய அடிப்படை விஷயங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சி முகாம் கோலார் அருகில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் நடந்திருக்கிறது. குழந்தைகளுக்கான பாலியல் கல்வி பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் பயிற்சி முகாம்களில் இருந்து இந்த முகாம் மாறுபட்ட அம்சங்களை கொண்டிருந்தது. இந்தியாவில் இதுவரை நடந்த முகாம்களில் இதில்தான் அதிக ஆசிரியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்புகள் பற்றி விளக்கமளிப்பது, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி விளக்கி கூறுவது, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக இயங்கும் நெட்வொர்க்குகள், அவைகளின் செயல்பாடுகள் போன்ற பல விஷயங்கள் அந்த முகாமில் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆசிரியர்கள் ஆர்வமாக திரண்டுவந்து பங்கேற்றிருக்கிறார்கள். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடு வதற்கு ஆசிரியர்கள்தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
Related Tags :
Next Story