திருப்பரங்குன்றம் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி; 13 பேர் படுகாயம்


திருப்பரங்குன்றம் அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி; 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 8 Oct 2018 1:22 AM IST (Updated: 8 Oct 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரத்தில் வேன் கவிழ்ந்து மூதாட்டி பரிதாபமாக இறந்துபோனார். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன். இவர் நேற்று அழகர்கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடத்தினார். இதற்காக சத்திரப்பட்டியில் இருந்து அழகர்கோவிலுக்கு வேன், கார்களில் நாராயணன் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த அவர்கள் அழகர்கோவிலில் இருந்து ஊருக்கு திருப்பரங்குன்றம் வழியாக சென்றனர்.

திருப்பரங்குன்றம் அருகே சம்பக்குளம் பகுதியில் வந்தபோது நாராயணன் உறவினர்கள் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த சத்திரப்பட்டியை சேர்ந்த சுப்புதாய்(வயது 65) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்துபோனார்.

மேலும் செண்பகம்(67), சிவச்சந்திரன்(29), கோபாலகிருஷ்ணன்(9), பாலாஜி(12), ஸ்ரீதரன்(10), பிரபு(40), நடராஜன்(68), தவமணி(75), மேனகா, கோபால் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 13 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story