திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2018 3:45 AM IST (Updated: 8 Oct 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு: விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பொச்சாரம்பட்டி காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னமாது. இவருடைய மகன் விஜய் (வயது 22). இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி அடிக்கடி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய பெற்றோர் இப்போது உனக்கு திருமண வயது இல்லை. வேலைக்கு செல் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனக்கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story