சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் சொத்துவரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ. பேசியதாவது:– தமிழ்நாட்டில் சொத்துவரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வு என அனைத்து வரிகளும் அதிகரித்துள்ளன. சொத்துவரி 100 சதவீதமாகவும் குடிநீர் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் நலன் கருதி மேற்கண்ட வரிகளை குறைக்க வேண்டும் எனவும் பேசினார்.

மேலும் செட்டியார்பட்டி செயல் அலுவலர் கண்ணனிடம் சொத்துவரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம் உயர்வை திரும்பப்பெறக்கோரி எம்.எல்.ஏ. மனு அளித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.நகர செயலாளர் ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் மாரிமுத்து மாவட்ட பிரதிநிதி கலைவாணர் வெங்கடேஷ் செல்வகனி ஒன்றிய பேரூர் நகர கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story