மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 9 Oct 2018 9:45 PM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று காலை மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீரென வந்தார். பின்னா அவர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கலெக்டர் கதிரவன், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

இதேபோல் அவர், எழுமாத்தூர் கனககிரி மலை கனகாசலக்குமரன் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டருடன், வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்பகாப், உதவி பொறியாளர் கிருஷ்ணமுர்த்தி பாண்டியன், பணி பார்வையாளர்கள் சந்திரசேகர், சின்னசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story