கோவில்கள்-வீடுகளில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
பெரம்பலூரில் நவராத்திரி விழா கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று தொடங்க உள்ளது.
பெரம்பலூர்,
நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 19-ந்தேதி விஜயதசமி வரை 10 நாட்கள் நடக்கிறது. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 37-வது ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா இன்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.
பெரம்பலூரில் நவராத்திரியை முன்னிட்டு பழைய மார்க்கெட் தெருவில் அமைந்துள்ள அம்சா (எல்லையம்மன்) என்கிற ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில் மற்றும் எளம்பலூரில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் கொலு விழா இன்று மாலை சிறப்பு பூஜை யுடன் தொடங்குகிறது.
பெரம்பலூரில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக கொலுவைக்கும் பெருமாள் கோவில் அக்ரகாரத்தெரு, மதரசா சாலையில் உள்ள என்.டி.சி. மையம் மற்றும் பெரும்பாலான வீடுகளில் மகாளய அமாவாசை தினத்தன்று கொலுவிற்கான படிகளை பொருத்தி பூரண கும்ப கலசத்தில் புனித நீரை ஊற்றினர். இந்நிலையில் நேற்று கொலு பொம்மைகளை அடுக்கி வைத்தனர். கொலு பொம்மைகளை அடுக்கி வைப்பதில் சிறுவர் சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கொலு பொம்மைகளில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகளும், வைகுண்ட நாதர், விஷ்ணுவின் தசாவதார காட்சிகள், சிவபெருமான் உருவபொம்மை, அம்பாளின் மகிமைகளை கூறும் பொம்மைகள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன. பாரதியார், காந்தி போன்ற தலைவர்களின் பொம்மைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை சிறப்பு பூஜை செய்து நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்குகின்றனர்.

Related Tags :
Next Story