பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் வசாயில் நடந்து உள்ளது.

வசாய்,

வசாய் கிழக்கு கைராய் பாடா பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவரின் மகன் அஜய் (வயது14). வீட்டருகே உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில் பள்ளி ஆசிரியர் பள்ளி கட்டணம் செலுத்தினால் தான் தேர்வு எழுத முடியும் என சொன்னதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவன் தந்தையிடம் கூறியுள்ளான். ஆனால் அவரால் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

இதனால் வேதனை அடைந்த சிறுவன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டான். இந்தநிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனின் நண்பன் ஒருவன் அஜய் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அஜயை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

போலீசார் சிறுவனின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் சிறுவன், பள்ளி நிர்வாகம் அவனது தற்கொலைக்கு காரணம் என எழுதி இருந்ததாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story