கின்னஸ் சாதனை முயற்சியாக 7½ கோடி மந்திரம் ஓதும் ஜெயின் சமூகத்தினர்
கின்னஸ் சாதனை முயற்சியாக உலக அமைதிக்காகவும், பித்ரு, நாக தோசங்கள் நிவர்த்தியாகவும் 7½ கோடி மந்திரங்கள் ஓதப்படுகிறது.
சென்னை,
சென்னை அயனாவரத்தில் தாதாவாடி ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கின்னஸ் சாதனை முயற்சியாக உலக அமைதிக்காகவும், பித்ரு, நாக தோசங்கள் நிவர்த்தியாகவும் 7½ கோடி மந்திரங்கள் ஓதப்படுகிறது. ‘ஜெயின் கமலா திவாகர் சொசைட்டி’ என்கிற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த சாதனை முயற்சியில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சுமார் 1,500 பெண்கள் உள்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜெயின் மத துறவியான சாத்வி குமுத்லதாஜி தலைமையில் நேற்று காலை 7.15 மணிக்கு மந்திரங்கள் ஓதும் நிகழ்வு தொடங்கியது. மகாபிரக்யாஜி, பதம்கீர்த்திஜி, ராஜ்கீர்த்திஜி உள்ளிட்ட துறவிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். தாதாவாடி ஜெயின் கோவில் வளாகத்தில் மந்திரங்கள் ஓதுபவர்கள் தரையில் அமர்ந்து ஆசனம் செய்வதற்கு என்று தனி இடம், வாயில் கட்டுவதற்கு துணி, ஜெபமாலை உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கோவில் வளாகத்திலேயே சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு 7½ கோடி மந்திரங்களும் ஓதி முடிக்கப்படுகிறது. அதன் பின்னர் 7½ கோடி மந்திரங்கள் ஓதப்பட்டதற்கான ஆதாரங் களை கின்னஸ் சாதனைக்கான குழுவிடம் கொடுக்கப்பட உள்ளதாக ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story