தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரத்தில் பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதி செய்ய வேண்டும். எலும்பு மருத்துவரை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாசிலைக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் பைந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பிச்சைமுத்து, திருப்புகழ், பெரியசாமி, அரவிந்குமார் பிரபாகரன், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story