மாவட்ட செய்திகள்

தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி + "||" + Continuous Rain Echo: Wai Dam Dam water level reached at 64 feet 5 District Farmers happiness

தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடியை எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி, 


தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வைகை அணை நீர்மட்டம் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் முழுகொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து மதுரை, திருமங்கலம், மேலூர் பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

இந்தநிலையில் இந்த மாதம் தொடங்கியது முதலே தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை, சுருளி, கொட்டக்குடி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வைகை அணைக்கும் நீர்வரத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த மாத தொடக்கத்தில் 56 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம், தொடர் மழை காரணமாக 8 அடி உயர்ந்து தற்போது 64 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முழுக்கொள்ளளவு 69 அடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முழுகொள்ளளவை எட்ட இன்னும் 5 அடி தான் இருப்பதால், வைகை அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஒருவேளை பருவமழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அணைக்கு வரும்நீர் அப்படியே வெளியேற்றப்படும். வைகை அணை நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டும் நிலை உருவாகியுள்ளதால், அதனை நம்பியுள்ள 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் வைகை அணை நீர்மட்டம் 63.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 819 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 4,350 மில்லியன் கன அடியாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எதிரொலி: வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்தது
நீர்வரத்து குறைந்ததாலும், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் வைகை அணை நீர்மட்டம் 57 அடியாக குறைந்துள்ளது.
2. தொடர் மழை எதிரொலி: வறண்டு கிடந்த வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் வந்தது - விவசாயிகள் மகிழ்ச்சி
வறண்டு கிடந்த வெலிங்டன் ஏரிக்கு தற்போது பெய்த தொடர் மழையால் தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
3. குன்னூரில் தொடர் மழை: முழு கொள்ளளவை எட்டிய ரேலியா அணை
குன்னூரில் பெய்து வரும் தொடர் மழையால், ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
4. தொடர் மழையால் கோமுகி அணை நீர்மட்டம் 38 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளது.
5. 3 மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு - வினாடிக்கு 4,650 கனஅடி நீர் வெளியேற்றம்
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரத்து 650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.