திருப்பூரில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 3:45 AM IST (Updated: 11 Oct 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பூர்,

வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டுக்குழுவின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி துணை கமி‌ஷனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வணிக வரித்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில வணிக வரி அலுவலக உதவி ஆணையர், துணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். ஜி.எஸ்.டி. சார்ந்த மறு சீரமைப்பில் 2,300 பணியிடங்களை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story