மாவட்ட செய்திகள்

திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரால் பரபரப்பு + "||" + At the same time in Tiruvarankulam, the youth who tried to steal 4 places, including 2 temples, were excited

திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரால் பரபரப்பு

திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் திருட முயன்ற வாலிபரால் பரபரப்பு
திருவரங்குளத்தில் ஒரே நாள் இரவில் 2 கோவில்கள் உள்பட 4 இடங்களில் வாலிபர் திருட முயன்றார். அப்போது போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவரங்குளம்,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் புகழ்பெற்ற சிவன்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். அப்போது நள்ளிரவு அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றார். உண்டியல் உடைக்கப்படும் சத்தம் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கேட்கவே, அங்கு வந்து பார்த்தனர்.


அப்போது வாலிபர் ஒருவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து திருடன்...திருடன்... என சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பொதுமக்கள் கோவிலுக்கு வந்ததால் திருட்டு தடுக்கப்பட்டது. கோவிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அங்கு திருட வந்த வாலிபர் கண்காணிப்பு கேமராவில் தனது உருவம் பதிவாகாமல் இருக்க கேமரா மின்வயரை துண்டித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில்

வாலிபர் திருவரங்குளம் மாவு மில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். ஆனால் அங்கு எந்த பொருட்களும், பணமும் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் போலீசார், பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க அப்பகுதியை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியரும், மாற்றுத்திறனாளியுமான செல்வராஜ் வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டார்.அங்கு செல்வராஜ் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை திருடினார். மேலும் செல்வராஜின் 3 சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு, போலீஸ் கண்ணில் சிக்காமல் சென்று விட்டார். இதைத்தொடர்ந்து திருவரங்குளம் பாரதியார் நகரில் உள்ள புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது செல்வராஜ் வீட்டில் திருடிய 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை கோவிலின் வெளிப்பகுதியில் உள்ள மரக்கிளையில் வைத்துள்ளார். பின்னர் ஜன்னலை உடைத்து அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்தார்.

இந்தநிலையில் கோவில் அருகே செல்வராஜ் வீட்டில் திருடப்பட்ட 3 சக்கர வண்டி நின்று கொண்டிருந்தது.இதனை கண்ட போலீசாரும், பொதுமக்களும் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது கோவிலுக்குள் அரிவாளை கையில் வைத்து கொண்டு உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை அந்த வாலிபர் எண்ணி கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவனை பிடிக்க முடிவு செய்த அவர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். இதையடுத்து குறுகிய ஜன்னல் வழியாக வெளியே வந்த அவனை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.அப்போது அந்த வாலிபர் அரிவாளை காட்டி மிரட்டி தப்பியோடி விட்டார். இதையடுத்து போலீசார் மரக்கிளையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களை கைப்பற்றினர். மேலும் செல்வராஜ் வீட்டில் இருந்து எடுத்து வந்த 3 சக்கர வண்டியையும் மீட்டனர். திருட வந்த வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தப்பி ஓடிய போது அந்த மோட்டார் சைக்கிளையும் விட்டு சென்று விட்டார். அதையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், ஆலங்குடி, கணேஷ்நகர் போலீசார் நேற்று சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 பவுன் நகை மற்றும் 4 செல்போன்களையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அதன் உரிமையாளரான மாற்றுத்திறனாளி செல்வராஜின் மனைவி அலமேலு மங்கையிடம் ஒப்படைத்தார்.இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் 4 இடங்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
போச்சம்பள்ளியில் போலீஸ்காரர் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி-மகள்களுடன் மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டி கொடுமையால் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனைவி-மகள்களுடன் மெக்கானிக் தீக்குளிக்க முயன்றார்.
3. தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்?
மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
4. ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டுத்தர கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
ஆக்கிரமிப்பு நிலத்தினை மீட்டுத்தர கோரி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பெரம்பலூரில் காதல் திருமணம் செய்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூரில் காதலர் தினத்தில் தனது காதல் கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.