மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு + "||" + Falling from the floor and old man dead

காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு

காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
காஞ்சீபுரம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே உள்ள வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 70). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர், குடிபோதையில் வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே இறங்க முயன்றார்.

அப்போது போதையில் இருந்த அவர், நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்தகாயம் அடைந்த அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. பூந்தமல்லியில் 2–வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி சாவு
பூந்தமல்லியில் மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.
2. காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் சாவு; திதி கொடுக்க வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
திதி கொடுக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இரட்டை குழந்தைகள் இறந்தன.
3. பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; டிரைவர் பலி
பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் டிரைவர் பலியானார். மேலும், வாலிபர் படுகாயம் அடைந்தார்.
4. பட்டுக்கோட்டையில் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி ஊழியர் சாவு
பட்டுக்கோட்டையில், கம்பத்தில் இருந்து தவறி விழுந்த கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி அய்யப்ப பக்தர் பலி; தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருப்பரங்குன்றத்தில் ரெயில் மோதி நாமக்கல்லை சேர்ந்த அய்யப்ப பக்தர் உயிரிழந்தார். தொடரும் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.