மாவட்ட செய்திகள்

குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை: கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை + "||" + Injury killing youth: 2 poultry workers sentenced to life imprisonment

குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை: கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை: கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
நாமக்கல் அருகே முன்விரோதம் காரணமாக குட்டையில் மூழ்கடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேவாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி அங்குள்ள குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது பிணத்தை கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் முன்விரோதம் காரணமாக கோழிப்பண்ணை தொழிலாளர்களான அகரம் அய்யர்சாலை காலனியை சேர்ந்த அருள் (25), நவணி பள்ளிப்பட்டியை சேர்ந்த மணி (24) ஆகிய இருவரும் கார்த்திக்கை குட்டையில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் அருள், மணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட அருள், மணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அருள், மணி ஆகிய இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி போன்று நாகையில் சம்பவம்: இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
நாகையில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் வாலிபர் கைது
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. நன்னிலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
நன்னிலம் அருகே பேரளத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னையில் திருமண ஆசைகாட்டி பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தாய் மற்றும் உறவினரும் சிக்கினார்கள்.
5. சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் சாவு
சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.