திரு.வி.க.நகரில் மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திரு.வி.க.நகரில் மாநகராட்சி பூங்காவை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2018 4:41 AM IST (Updated: 11 Oct 2018 4:41 AM IST)
t-max-icont-min-icon

திரு.வி.க. நகர் பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திரு.வி.க.நகர், 

சென்னை திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சாலையோர பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்போது பராமரிப்பு இன்றி முட்புதர்கள் சூழ்ந்து சிறிய காடு போன்று காட்சி அளிக்கிறது. பூங்காவிற்குள் சிறிய அளவில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை உள்ளது.

மேலும் முதியவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பராமரிப்பு இன்றி உள்ள இந்த பூங்கா சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இங்குள்ள முட்புதர்களில் கொடிய பூச்சிகள் உள்ளன. இதனால் பூங்காவிற்கு செல்ல பொதுமக்கள் அஞ்சுகிறார்கள்.

எனவே முட்புதர்களை நீக்கி பூங்காவை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story