மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 3 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 3 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 4:56 AM IST (Updated: 11 Oct 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தானே,

தானே மாவட்டம் பிவண்டி ராஜ்னோலி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் பம்பாரே (வயது 36). இவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

கணவர், மனைவி இருவரும் சிறு, சிறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதில் தீபக் பம்பாரே மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தி இருக்கிறார்.

3 ஆண்டு ஜெயில்

இதனால் மனமுடைந்த மனிஷா 2013-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் தீபக் பம்பாரேயை கைது செய்தனர். மேலும் அவர் மீது தானே மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் தீபக் பம்பாரே மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, தீர்ப்பு கூறிய கோர்ட்டு தீபக் பம்பாரேவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

Next Story