நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 3:10 PM GMT)

நாகர்கோவிலில் போலீசாரை கண்டித்து 5 கல்லூரி மாணவ– மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், உயர்த்திய கட்டணத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் மாணவ– மாணவிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறக்கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெசின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பதில்சிங் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் உள்ள 5 கலை அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தியும், போலீசாரை கண்டித்தும் மாணவ– மாணவிகள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story