வீடுகளில் கொசுப்புழு இருந்தால் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


வீடுகளில் கொசுப்புழு இருந்தால் அபராதம் - மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2018 3:15 AM IST (Updated: 11 Oct 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் வீடுகளிலுள்ள தண்ணீரில் கொசுப்புழு இருந்தால், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை கையாளும் விதமாக பொதுமக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் கொசு மற்றும் புழுக்களை அழிக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் சுழற்சி முறையில் 7 நாட்களுக்கு ஒருமுறை டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, கொசுப்புழு உற்பத்தியாகும் காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி சிதம்பரநகர் பகுதியில் நடந்த ஆய்வின் போது, கட்டுமான பணிகள் நடந்து வந்த ஒருகட்டிடத்தில் தேக்கி வைக்கப்பட்டுஇருந்த தண்ணீரில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டன. இதனர் அந்த கட்டிட உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று சிதம்பரநகர் மெயின் ரோட்டில் டீக்கடையில் உள்ள தண்ணீர் தொட்டியில் கொசுப்புழு இருந்ததால், அதன் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
எனவே பொதுமக்கள், வியாபாரிகள் தாங்கள் உபயோகப்படுத்தும் இடங்களை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். சேமித்து வைக்கும் தண்ணீரில் புழுக்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

Next Story