கானத்தூர் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் சங்கிலி பறித்தவர் கைது


கானத்தூர் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் சங்கிலி பறித்தவர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 3:00 AM IST (Updated: 12 Oct 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

கானத்தூர் பகுதியில் போலீஸ் எனக்கூறி வாலிபரிடம் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வில்லிவாக்கம், ராஜாஜி நகர், கங்கா தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 25). இவர், தனது தோழியுடன் கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர், தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, பிரதீப்பை மிரட்டி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்செல்ல முயன்றார்.

உடனே சுதாரித்துக்கொண்ட பிரதீப், சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கானத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறையில் அடைப்பு

போலீஸ் விசாரணையில், பிடிபட்டவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவராமன்(37) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 7 பவுன் தங்க சங்கிலி, ஒரு மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர், போலீஸ் என கூறி சங்கிலி பறித்தது தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் 10 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் கைதான சிவராமன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story