மாவட்ட செய்திகள்

திருவொற்றியூரில்ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை + "||" + Civilian siege in the ration shop

திருவொற்றியூரில்ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை

திருவொற்றியூரில்ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை
திருவொற்றியூர் ரேஷன் கடையை 100-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டனர்.
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சண்முகபுரம் ரேஷன் கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளது. சமீப காலமாக இந்த கடையில் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை ரேஷன் பொருள் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திடீரென ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

அப்போது ரேஷன் கடை ஊழியர்கள், பொருட்கள் தட்டுப்பாடு குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், முற்றுகையை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.