கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம்; இன்று நடக்கிறது


கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம்; இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 Oct 2018 4:00 AM IST (Updated: 12 Oct 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) மக்கள் திட்டமிடல் இயக்கம் சார்பில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் மேற்கொள்ளும் பொருட்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பினை வைத்து ஒப்புதல் பெறுதல், கிராம ஊராட்சியின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஐந்தாண்டில் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்து அவை அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழிவகைகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசித்தல், உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன.

மேலும் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அடித்தட்டு மக்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும். இவ்வாறு கிராமத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்தப்படும் போது தான் கிராம வளர்ச்சிக்கான திட்டமிடல் முழுமை அடைந்ததாக இருக்கும்.

அதன்படி கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களால் (கி.ஊ) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற இருக்கும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story