மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம் + "||" + Near Mellore: The bull race bet

மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்

மேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்
மேலூர் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
மேலூர், 

மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியில் எம்.எஸ்.பி. பாய்ஸ் ரேக்ளா நண்பர்கள் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரஸ்னேவ் போட்டிகளை தொடங்கி வைத்தார். கத்தப்பட்டியில் இருந்து ஆமூர் வரையிலான ரோட்டில் பெரியமாடு மற்றும் சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

பெரியமாடு பிரிவில் மொத்தம் 14 மாட்டுவண்டிகள் போட்டியிட்டன. இதில் டி.புதுப்பட்டியை சேர்ந்த சின்னசாமி அம்பலம் வண்டி முதல் பரிசு ரூ.15 ஆயிரத்தை வென்றது. 2-வது பரிசு ரூ.13 ஆயிரத்தை மதுரை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் வண்டி பெற்றது. 3-வது பரிசு ரூ.11 ஆயிரத்தை கலுங்குபட்டி ஆண்டி அம்பலம் என்பவரின் வண்டி வென்றது.

சிறிய மாடு பிரிவு போட்டியில் மொத்தம் 17 மாட்டுவண்டிகள் போட்டியிட்டன. இதில் முதல் பரிசு ரூ.13 ஆயிரத்தை கள்ளந்திரி பாலகிருஷ்ணனின் வண்டி பெற்றது. 2-வது பரிசை நரசிங்கம்பட்டி ஜனனி வண்டி வென்றது. 3-வது பரிசை பூங்கொல்லை ரீத்தீஸ் என்பவரின் வண்டியும், 4-வது பரிசை மேலமடை சீமான்ராஜா வண்டியும் வென்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தேவகோட்டை அருகே, புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
தேவகோட்டை அருகே கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.