மாவட்ட செய்திகள்

கிளியனூர் அருகே : கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி + "||" + Near Kilinoor: A young girl fell in the well and fell into the well

கிளியனூர் அருகே : கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி

கிளியனூர் அருகே : கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலி
கிளியனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளம்பெண் பலியானார்.
விழுப்புரம், 


திண்டிவனம் தாலுகா கோவடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முனியம்மாள் (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் நேற்று காலை துணிகளை துவைப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்துக்கு முனியம்மாள் சென்றார். அங்கு அவர் விளை நிலத்தில் இருந்த கிணற்றின் அருகில் அமர்ந்து துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென கால்தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சில இளைஞர்கள் கிணற்றில் குதித்து முனியம்மாளை மீட்டு, சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முனியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.