சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:47 PM GMT (Updated: 11 Oct 2018 10:47 PM GMT)

சோழிங்கநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையை ஒட்டிய பழைய வண்டிசாலையில் உள்ள சுமார் 10 அடி அகல ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய்துறை சார்பில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

மழைகாலங்களில் சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், சாலைவிரிவாக்கம் வேண்டியும் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது.

புறம்போக்கு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் முதற்கட்டமாக இடிக்கப்பட்டன. நேற்று மீண்டும் இடிக்கும் பணி தொடங்கியபோது அந்த பகுதியில் உள்ள சிலர் இது பட்டாநிலம் என்று கூறியதையடுத்து நேற்று இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

Next Story