பெரம்பலூர், லெப்பைக்குடிக்காடு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி


பெரம்பலூர், லெப்பைக்குடிக்காடு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 4:35 PM GMT)

பெரம்பலூர், லெப்பைக்குடிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.இதில் கழிவுநீரை சுத்திகரித்தல், இயற்கை பேரிடர் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, பசுமை வீடுகள், தூய்மை பாரதம் மற்றும் அறிவியல் சார்ந்த படைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) புகழேந்தி பார்வையிட்டார். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மாணவ, மாணவிகளின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நீர் சுத்திகரிப்பு, ஒளி விலகல், திரவங்களின் அடர்த்தி, ஜீரோ பலகை வட்டம், கணித மேஜிக் ஆகியவைகளை விளக்கும் செயல் விளக்கங்கள் உள்பட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியை பார்வையிட வந்த பிற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் விளக்கம் அளித்தனர். இந்த கண்காட்சியில் கீழக்குடிக்காடு, பெண்ணக்கோணம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story