புதுவை அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு


புதுவை அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2018 4:00 AM IST (Updated: 13 Oct 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அரசு உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

புதுவை அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் குமார் வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது. புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) திட்ட இயக்குனர் ருத்ரகவுடு, பள்ளி கல்வி இயக்குனராகவும், கூடுதல் பொறுப்பு (டி.ஆர்.டி.ஏ.) திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகி மண்டல நிர்வாகி மாணிக்கதீபன் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவன திட்ட நிர்வாக அதிகாரியாகவும், துணை கலெக்டர் (வடக்கு) தில்லைவேல் துணை தலைமை தேர்தல் அதிகாரியாகவும், மாகி நகராட்சி ஆணையர் அமன் சர்மா மாகி மண்டல நிர்வாகியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர் துணை கலெக்டராகவும் (வடக்கு), இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

கவர்னரின் கூடுதல் செயலராக கூடுதல் உள்துறை செயலர் சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் ஐதராபாத் மத்திய மீன்வள மேம்பாட்டு வாரியத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையராக ஆதர்ஷ், மாகி நகராட்சி ஆணையராக அபிஷ் கோயல் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் பிறப்பித்துள்ளார்.


Next Story