தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் மயங்கி விழுந்து சாவு


தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 12 Oct 2018 9:47 PM GMT (Updated: 12 Oct 2018 9:47 PM GMT)

சுரண்டை அருகே, தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் தட்டான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் சின்னத்தம்பி (வயது 45). இவர் தனது தாயார் மீது அதிக பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில் அவருடைய தாயார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.

இதனால் துக்கம் தாங்காமல் சின்னத்தம்பி மனமுடைந்து மிகவும் சோர்வாக இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் சின்னத்தம்பி பரிதாபமாக இறந்தார். சின்னத்தம்பிக்கு ரத்தக் கொதிப்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சாம்பவர் வடகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சின்னத்தம்பிக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story