சென்னை திருவான்மியூரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருவான்மியூரில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அடையாறு,
சென்னை திருவான்மியூர், ரங்கநாதபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பெருங்குடி ஜீவரத்தினபுரத்தை சேர்ந்த தியாகராஜ் என்கிற சீனு (24) நட்பாக பழகினார். இவர் அங்குள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்துவந்தார்.
தியாகராஜ் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றார். அப்போது அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.
சிறையில் அடைப்பு
திடீரென அந்த சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், பெற்றோர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவலை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்போது தியாகராஜ் பற்றி சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல் இதுபற்றி விசாரணை நடத்தி தியாகராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். போலீசார் தியாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story