திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி


திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 13 Oct 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்காகவும், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியானது திருவள்ளூரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய பகுதிகளிலும் இந்த புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது.

அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி போடலாம். அந்த மனுக்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். எனவே பொதுமக்கள் இந்த புதிதாக வைக்கப்பட்ட புகார் பெட்டியில் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி பயன்பெறலாம்.

மேலும் இந்த புகார் பெட்டி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணராஜ், பாரதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story