மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ரூ.53 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ரூ.53 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரியில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ரூ.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி பயனாளிகளுக்கு வழங்கினார்.

சங்ககிரி,

சங்ககிரி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்ககிரி, எடப்பாடி ஆகிய 2 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு 700-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார். 30 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. ரூ.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.

தேவண்ணகவுண்டனூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மூதாட்டி குஞ்சாள் என்பவரின் மகன் கூலி தொழிலாளி பழனியப்பன்- கவிதா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பழனியப்பனும், கவிதாவும் குழந்தைகளை விட்டு விட்டு வேறு நபர்களுடன் தனித்தனியாக சென்று விட்டனர்.் அந்த பேரக்குழந்தைகளை பாட்டி குஞ்சாள் வளர்த்து வருகிறார். குறை தீர்க்கும் முகாமிற்கு 3 பேர குழந்தைகளுடன் வந்த குஞ்சாள் முதியோர் உதவிதொகை கேட்டு மனு அளித்தார். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து முதியோர் உதவித்தொகை வழங்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார்.

இந்த முகாமில் சங்ககிரி உதவி கலெக்டர் (பொறுப்பு) வேடியப்பன், சேலம் மாவட்ட துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாரதா ருக்மணி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அருணாசலம், சங்ககிரி தாசில்தார் அருள்குமார், எடப்பாடி தாசில்தார் கேசவன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story