மாவட்ட செய்திகள்

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை + "||" + Firefighters in Ariyalur-Perambalur rehearsal for World Disaster Reduction Day

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை

உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர்-பெரம்பலூரில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை
உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது.
அரியலூர்,

பேரிடர் மேலாண்மை சார்பில் உலக பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு நேற்று அரியலூர் நிர்மலா மெட்ரிக் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரியலூர் பள்ளி மாணவ, மாணவிகள் தவிர்ப்போம், தவிர்ப்போம் வெள்ள நீரில் குளிப்பதை தவிர்ப்போம், துண்டிப்போம் துண்டிப்போம் தீ விபத்து, இடி மின்னலின் போது மின் இணைப்பை துண்டிப்போம், நிற்க வைக்காதீர் நிற்க வைக்காதீர் இடி, மின்னலின் போது கால்நடைகளை மரத்திற்கடியில் நிற்க வைக்காதீர். தெரிவிப்போம் தெரிவிப்போம் பேரிடர் நிகழ்வுகளை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-க்கு தெரிவிப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். இந்த ஊர்வலம் அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


தொடர்ந்து அரியலூர் பஸ் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடந்தது. அப்போது அரியலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் முன்னிலையில் பேரிடர் தற்காப்பு நடவடிக்கைகளை செயல் விளக்கம் மூலம் காண்பித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தாசில்தார்கள் விக்டோரியா (பேரிடர்மேலாண்மை), முத்துலட்சுமி (அரியலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடர் குறைப்புதினத்தை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் சார்பில் ஒத்திகை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில், நிலைய அலுவலர் பால்ராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்கள் மூலம் விபத்து மற்றும் வெள்ள நேரங்களில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்தும் மற்றும் சாலையில் விழும் மரங்களை அகற்றுவது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொழிலாளர் துறை சார்பில் நடந்தது
வர்த்தக நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம், தொழிலாளர் துறை சார்பில் நடந்தது.
2. நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நடந்தது. இதனை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
3. தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
4. சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
சமரச மையத்தில் வழக்குதரப்பினர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயகாந்த் கூறினார்.
5. 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் மூலம் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர். தஞ்சையில் 4 கி.மீ. தூரம் இந்த நிகழ்ச்சி நடந்தது.