மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பஸ் நிலையம்: பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் + "||" + Dindigul bus station: Firefighters involved in the disaster rescue program

திண்டுக்கல் பஸ் நிலையம்: பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்

திண்டுக்கல் பஸ் நிலையம்: பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, உயரமான கட்டிடத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக கீழே இறக்குதல், தீ விபத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினார்.


மேலும், கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்தால் பாதுகாப்பாக அணைப்பது எப்படி? என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட தேசிய பேரிடர் மீட்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. இதனை கலெக்டர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி தலைமை தபால் நிலையம், பஸ்நிலையம், காமராஜர், அண்ணா சிலைகள் வழியாக வந்து மீண்டும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஆர்.டி.ஓ. ஜீவா, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் யூஜின் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.