காளாம்பட்டு கிராமத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த காளியம்மன் கோவில் திறப்பு
காட்பாடியை அடுத்த காளாம்பட்டு கிராமத்தில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த காளியம்மன் கோவிலை சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் திறந்து வைத்தனர்.
காட்பாடி,
காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த காளாம்பட்டு கிராமத்தில் மிகவும் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். பல ஆண்டுகளாக நவராத்திரி விழா நடத்தி வந்தனர். 2010-ம் ஆண்டு கிராமத்தில் இருந்து சற்றுத் தொலைவில் புதிதாக மற்றொரு காளியம்மன் கோவில் கட்டப்பட்டது.
அதனால் நவராத்திரி விழாவை எந்தக் கோவிலில் நடத்துவது? என்பது குறித்து ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் 2 கோவில்களும் மூடப்பட்டன. இதுதொடர்பாக இருபிரிவினரும் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன. ஆனால் கோவிலை திறந்த ஒருசில நாட்களிலேயே பூட்டப்பட்டது. இந்த ஆண்டு புதிய கோவிலில் நவராத்திரி விழாவை கொண்டாட ஒருபிரிவினர் முயற்சி செய்தனர். இதை அறிந்த காட்பாடி தாசில்தார் ஜெயந்தி 9-ந் தேதி காளாம்பட்டு கிராமத்துக்குச் சென்று கோவிலை திறக்க நடவடிக்கை எடுத்தார்.
இதை அறிந்த மற்றொரு பிரிவினர் தாசில்தாரை முற்றுகையிட்டு, கோவில் திறப்பது குறித்துக் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் திறக்கக்கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தாசில்தார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறேன், என்றார். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேற்கண்ட விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் 10-ந் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவராத்திரி விழாவை அரசே முன்நின்று நடத்த வேண்டும். புதிய கோவிலை திறந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடத்த வேண்டும், என உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தாசில்தார் ஜெயந்தி மற்றும் வருவாய்த்துறையினர் காளாம்பட்டு கிராமத்துக்குச் சென்றனர். அங்கு, புதிதாக கட்டப்பட்ட கோவிலை இருபிரிவினர் முன்னிலையிலும் திறந்து வைத்தனர். இதனை வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ் ஆய்வு செய்தார். இதையொட்டி லத்தேரி மற்றும் பனமடங்கி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவில் திறக்கப்பட்டு, காளியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நேற்று நவராத்திரி பூஜை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல ஆண்டுகள் மூடப்பட்டு இருந்த கோவில், தற்போது திறக்கப்பட்டதால் பக்தர்களும், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story