கடன் தொல்லையால் பரிதாபம்: ரெயில் முன் பாய்ந்து காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை


கடன் தொல்லையால் பரிதாபம்: ரெயில் முன் பாய்ந்து காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2018 3:30 AM IST (Updated: 15 Oct 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லை காரணமாக காங்கிரஸ் பிரமுகர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆத்தூர், 

சேலம் மாவட்டம், ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 60). காங்கிரஸ் பிரமுகர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் ஏற்கனவே ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும், நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் ரூ.25 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு கடன் கொடுத்தவர்கள் திரும்ப பணத்தை கேட்டனர். கடன் தொகையை திரும்ப கொடுக்க முடியாததால் மிகவும் வேதனை அடைந்து உள்ளார். அதே நேரத்தில் உடல்நிலை குறைவாலும் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பன்னீர்செல்வம் நேற்று மதியம் ஆத்தூர் ரெயில் நிலையம் அருகே நாகூர்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பன்னீர்செல்வத்துக்கு தனம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story