தூத்துக்குடியில் காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
தூத்துக்குடியில் காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் காளி வேடம் அணிந்த பக்தர் கள் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி ருத்ர தர்ம சேவா அமைப்பு சார்பில் காளி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஊர்வலம் தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே தொடங்கியது. ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில இளைஞர் அணி செயலாளர் செல்வசுந்தர், பூஜாரி பேரவை மாநில அமைப்பாளர் சாஸ்தா, மாவட்ட செயலாளர் வீரமுருகன், தென்மண்டல தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரிசளிப்பு
ஊர்வலம் பாளையங்கோட்டை ரோடு வழியாக தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு முடிவடைந்தது. தொடர்ந்து ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிறப்பாக காளி வேடம் அணிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக 20 கிலோ வெண்கல திரிசூலம், 2-வது பரிசு 6 கிலோ வெண்கல அக்னிசட்டி, 3-வது பரிசு 3 கிலோ வெண்கல வாள் வழங்கப்பட்டது.
ஊர்வலத்தில் காளிவேடம் அணிந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story