பாபநாசம் தலையணைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பாபநாசம் தலையணைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்,
பாபநாசம் தலையணைக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலையணை பாதை
பாபநாசம் கோவிலுக்கு பின்புறம் உள்ள சாலை வழியாக தலையணைக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. மேலும் இந்த சாலையின் அருகே, வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் உள்ள கரையில் இருந்து தண்ணீர் கசிந்து, இந்த சாலையின் நடுப்பகுதியில் ஓடையாக வழிந்தோடுகிறது.
தற்போது தாமிரபரணி புஷ்கர விழா நடைபெற்று வருவதால் இந்த பாதையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்கின்றனர். அந்த பாதையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மிதித்து செல்லும் போது, பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இதுசம்பந்தமாக ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சீரமைக்க...
கால்வாயின் கரையில் இருந்து கசிந்து வரும் தண்ணீர் வடிந்து செல்ல ஓடை இருந்தது. தற்போது புதிதாக கட்டிய கட்டிடங்களால் ஓடை காணாமல் போய்விட்டது. முறையான ஓடை இல்லாததால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பாதையை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story