வாட் வரியை குறைத்த பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
வாட் வரியை குறைத்த பிறகும் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மும்பை,
வாட் வரியை குறைத்த பிறகும் மும்பையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதிகரிக்கும் பெட்ரோல் விலை
மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை ரூ.91-ஐ எட்டி புதிய உச்சத்தை தொட்டது. இது பொதுமக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைத்தது.
இதன் மூலம் அக்டோபர் 4-ந் தேதி ரூ.91.34 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 5-ந் தேதி ரூ.86.97 ஆனது. ஆனால் அதன் பிறகும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது.
டீசல் விலையும் உயர்கிறது
பெட்ரோல் விலை அக்டோபர் 6-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை முறையே ரூ.87.15, 87.29, 87.50, 87.73, 87.73, 87.82, 87.94, 88.12 ஆக அதிகரித்து கொண்டே வருகிறது.
நேற்று பெட்ரோல் விலை ரூ.88.18 ஆக இருந்தது. இதே போல டீசல் விலையும் தொடர்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த 5-ந் தேதி ரூ.77.45 ஆக இருந்த டீசல் விலை நேற்று ரூ.79.02 ஆக உள்ளது.
Related Tags :
Next Story