திருப்பூரில் விநாயகர் கோவிலில் கொள்ளை
திருப்பூரில் விநாயகர் கோவிலில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாலர் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயில்சாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் நேற்று காலை கோவிலை திறப்பதற்காக அவர் வந்துள்ளார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்கள் இருந்த இடத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு தனியாக கிடந்தன.
உண்டியலை உடைக்க முடியாததால், அதில் இருந்து அவர்களால் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. மேலும், விநாயகருக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கவசம் கோவில் வளாகத்தில் வீசப்பட்டிருந்தது. அலுவலக அறையில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்து வெள்ளிப்பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பூசாரி அறையில் இருந்த ரூ.200-ஐ மட்டும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து பூசாரி கொடுத்த தகவலின் பேரில், கோவில் நிர்வாகிகளும், திருப்பூர் தெற்கு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பொருட்களில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
பின்னர், கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் 2 வாலிபர்கள் கோவிலுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
அந்த காட்சியை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கோவிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story