“மாணவர்கள் கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்”-கலெக்டர் ஷில்பா வேண்டுகோள்
“மாணவர்கள் கைகழுவும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நெல்லை,
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக கைகழுவும் தின விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கைகளை கழுவி சுத்தமாக வைத்து இருந்தால் தொற்று நோயில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகள் சாப்பிடுவதற்கு முன்பு சோப்பு போட்டு சுத்தமாக கைகழுவ வேண்டும்.
இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அதேபோல் வெளியே போய் விட்டு வீட்டுக்கு வரும் போதும் அனைவரும் கைகளை கழுவ வேண்டும். கை, கால்களில் வளரும் நகங்களை வாரம் ஒரு முறை வெட்டும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குழந்தைகளின் நகத்தில் சேர்ந்து இருக்கும் அழுக்கினால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் நகத்தை அவ்வப்போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
குழந்தை பருவத்தில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல் துலக்குதல், காலை கடன் கழித்தல், சுத்தமாக குளித்து உடலை பேணி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி, முதன்மை கல்வி அலுவலர் பாலா, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story